• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டக்கூடிய வகையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை முக கவசங்களை கொள்வனவு செய்தல்
- கட்டக்கூடிய வகையைச் சேர்ந்த 89 மில்லியன் சத்திரசிகிச்சை முக கவசங்களை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச ரீதியில் கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆகக்குறைந்த அனுசரணையான விலையினை முன்வைத்துள்ள கேள்விதாரரான M/s Sisili Projects Consortium (Pvt.) Ltd., கம்பனிக்கு உரிய பெறுகையை கையளிப்பதற்கும் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் முதற்கட்டமாக 30 மில்லியன் முக கவசங்களை கொள்வனவு செய்வற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.