• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நுகர்வோருக்கான விற்பனை நிலையங்கள் சார்பில் விற்பனை அலகு முறைமையினை கொள்வனவு செய்தல்
- பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நுகர்வோருக்கான விற்பனை நிலையங்கள் சார்பில் விற்பனை அலகு முறைமையினை கொள்வனவு செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரும் வழிமுறையினை பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 05 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் குறித்த பெறுகையை Ewis Solution (Pvt.) Ltd. கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.