• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் போக்குவரத்து முறைமையுடன் இயந்திரம் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒன்றிணைத்தல்
- இலங்கையில் தற்போது செயற்பாட்டு ரீதியிலுள்ள வாகனங்கள் 05 மில்லியனுக்கு கூடுதலாகும். இது 2000 ஆம் ஆண்டைவிட 3 மடங்கு அதிகரிப்பினைக் காட்டுகின்றது. முக்கியமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்ற தனிப்பட்ட வாகனங்களின் இறக்குமதி அதிகரித்தமை இதற்கான காரணமாய் அமைந்துள்ளதென அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வருமான மட்டம் அதிகரித்துள்ளமை மற்றும் நடைமுறையிலுள்ள பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது உருவாகும் சிரமங்கள் காரணமாக தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு கூடிய விருப்பம் நிலவுகிறமை தெரியவருகின்றதோடு, தனிப்பட்ட மோட்டார் வாகன பாவனை துரிதமாக அதிகரித்துள்ளமை இயந்திரமல்லாத போக்குவரத்து முறைகளின் பங்களிப்பு குறைவடைவதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. இயந்திரம் அல்லாத போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதன் மூலம் வளி மாசடைதலை குறைத்தல் அதேபோன்று உடல் ஆரோக்கியம், வளியின் தரம், சுற்றாடல், காலநிலை மாற்றம் மற்றும் தனிநபர் நிதி நிலைமை போன்ற விடயங்களின்பால் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஆதலால் பொருளாதார மற்றும் சுற்றாடல் நலன்களை அடைவதற்கு இயந்திரம் அல்லாத போக்குவரத்து முறைகளை தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒன்றிணைப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு அனுகுமுறையின் கீழ் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* தற்போதுள்ள வீதிகளில் பொருத்தமானவாறு துவிச்சக்கர வண்டிகளுக்கான பாதை வழிகளை ஒதுக்குதல் மற்றும் பாதசாரிகளுக்காக தற்போதுள்ள நடைபாதைகளை விருத்தி செய்தல்.

* எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் வீதிகள் சார்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பாதை வழிகளை மற்றும் நடைபாதைகளை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

* அரசாங்க அலுவலக பதவியணியினரின் துவிச்சக்கர வண்டி பாவனையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

* அலுவலகங்களின் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவர்களுக்கு அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்கள் மற்றும் அதற்கான வசதிகளை வழங்குதல்.