• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் காபன் பூச்சியமான நாடொன்றாக மாற்றும் பொருட்டு வழிகாட்டல் முறையொன்றையும் திறமுறை திட்டமொன்றையும் தயாரித்தல
- நாடொன்று காபன் பூச்சியமான நிலையினை அடைவதற்கு முக்கியமாக வளிமண்டலத்திற்கு விடுவிக்கப்படும் வாயுவின் அளவை குறைக்கவேண்டுமென்பதோடு, வாயு மண்டலத்தின் காபன்டயக்சைட் வாயுவை உரிஞ்சும் சுற்றாடல் முறைமையினை அதிகரித்தல் வேண்டும். இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் காபன் பூச்சியமான நாடொன்றாக மாற்றும் இலக்கினை வெற்றி கொள்வதற்கு வழிகாட்டல் முறையொன்றையும் திறமுறை திட்டமொன்றையும் தயாரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை முன்னேற்றத்தினை மீளாய்வு செய்து திருத்தப்படும் வழிகாட்டல் முறையொன்று மற்றும் ஐந்து வருடகால திறமுறைத் திட்டமொன்றை தயாரிப்பதற்கும் இதன் பொருட்டு நிபுணத்துவம் மிக்கவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்குமாக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.