• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனியின் பணிகளை பலப்படுத்துதல்
- இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் காபன் பூச்சியமான நாடொன்றாக மாற்றுவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானமொன்றை எடுத்துள்ளமை பற்றி ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பித்த தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் மூலம் அறிக்கையிட்டுள்ளது. காபன் வௌியேற்றத்தைக் குறைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனி தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை காபன் பூச்சியமான நாடொன்றாக மாற்றுவதற்குத் தேவையான உச்சப் பங்களிப்பினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் இந்தக் கம்பனியின் பணிகள் மற்றும் பொறுப்புக்களை சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைப்பு ரீதியில் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.