• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை இலங்கை - 'ஒவ்வொருவரும் - மரக்கன்று ஒன்று' தேசிய நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கையில் தற்போதுள்ள வனங்களைப் பாதுகாத்து 2025 ஆம் ஆண்டளவில் வனத்தை 30 சதவீதம் வரை அதிகரிப் பதற்கும் நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாத்து ஆக்கிரமிப்புச் செய்யும் தாவரங்களை அப்புறப்படுத்தி சாதகமான தாவரங்களின் மூலம் வனத்தை அதிகரிப்பதற்கும் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் கீழ் 2,000 மில்லியன் ரூபாவானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பசுமை இலங்கை - 'ஒவ்வொருவரும் - மரக்கன்று ஒன்று' என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சினால் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் கீழ் பின்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

* 200 வனக் கிராமங்களைத் தாபித்தல்

* பாடசாலைகள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* நாடு தழுவிய ரீதியில் ஔடத பூங்காக்களைத் தாபித்தல்

* மத வழிபாட்டு தலங்களில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* குளக்கரைகள், நீர்ப்பாசன ஒதுக்கங்கள் மற்றும் நீரேந்து பிரதேசங்களில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* அரசாங்க நிறுவனங்கள், பகுதி அரசாங்க நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* தோட்டக் கம்பனிகளினால் முகாமிக்கப்படும் காணிகள் மற்றும் தனி உரிமைகொண்ட காணிகளில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* நாடு தழுவிய ரீதியில் நாற்றுமேடைகளைத் தாபித்தல்

* வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் அறியச் செய்வதற்கு பிரசார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

* வனச்செய்கைக்கு பொருத்தமான தாவர வகைகளை இனங்காணுதலும் அதேபோன்று அபிவிருத்தி செய்வதற்கும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

இந்தக் கருத்திட்டங்களை மாவட்ட செயலாளர்களினதும் பிரதேச செயலாளர் களினதும் தலைமையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.