• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா மானியமொன்றை வழங்குதல்
- மாண்புமிகு நிதி அமைச்சரினால் 'பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதற்கான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்' என்னும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரிப்புகளுக்கு 2022 சனவரி மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த பிரேிப்புகளில் தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா மானியமொன்றை வழங்குவது சம்பந்தமாகவுள்ள பிரேரிப்பு வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிபாரிசுகளின் பிரகாரம் இனங்காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா மானிய விலையில் வழங்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.