• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு சிறிய சிறப்பு விற்பனை நிலைய (Home Shop) வலையமைப்பொன்றைத் தாபித்தல்
- கிராமிய குடும்ப அலகுகளில் தொழில்முயற்சிகளை விரும்பும் பெண் தொழில்முயற்சி யாளர்களை இனங்கண்டு தொழில்முயற்சிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆரம்ப மூலதனத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் 'கிராமமொன்றில் பெண் தொழில்முயற்சியாளர் ஒருவரை' உருவாக்கும் நோக்கில் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு சிறிய சிறப்பு விற்பனை நிலைய (Home Shop) வலையமைப்பொன்றைத் தாபிக்கும் நிகழ்ச்சித்திட்டம் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 15,000 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய தொழில்முயற்சியாளர்களை இனங்காண்பதற்கு பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியின் ஆலோசனையின் மீது பிராந்திய அபிவிருத்தி குழுவின் வழிகாட்டுதல் மீது பிரதேச செயலாளர்களினால் மேற்கொள்ளப்படும். உத்தேச சிறிய சிறப்பு விற்பனை நிலையத்திற்கு 200-400 சதுரஅடிகொண்ட இடவசதியினை தமது வீட்டின் ஒரு பகுதியில் அல்லது வீட்டைப் புதுப்பிப்பதன் மூலம் அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக புதிதாக நிர்மாணித்து கொள்வதன் மூலம் அல்லது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நிர்மாணித்து கொள்வதன் மூலம் என்னும் ஏதேனும் ஒரு முறையின் கீழ் ஏற்பாடு செய்து கொள்வதற்கு தெரிவு செய்யப்படும் தொழில்முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். உரிய சிறிய சிறப்பு விற்பனை நிலையம் கணனி வலையமைப்பின் ஊடாக இணைக்கப்படுவதோடு, குறித்த விற்பனை நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள், வீட்டுத் தளபாடங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும். விற்பனை செய்வதற்கான நுகர்வுப் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக பெண் தொழில்முயற்சி யாளர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேட தகவுத் திறன்களின் மீது தெரிவுசெய்யப்படும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் டிஜிட்டல் அட்டையின் ஊடாக வழங்கப்படவுள்ள சலுகை பொதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2,000/- ரூபா உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக ஏனைய அத்தியாவசிய பொருட்களை இந்த சிறிய சிறப்பு விற்பனை நிலையங் களிலிருந்து நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு குறித்த பயனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க, உத்தேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.