• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் விசேட பாடசாலை ஆசிரியர்கள் சார்பிலும் ஏற்புடைத்தாக்குதல்
- ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வௌியிடப்பட்ட 03/2016(IV) ஆம் இலக்கமுடைய அரசாங்க நிருவாக சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் விசேட பாடசாலை ஆசிரியர்கள் சார்பிலும் ஏற்புடைத்தாக்கிக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.