• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய மத்தியஸ்த சட்டத்தை அறிமுகப்படுத்துதல்
– இலங்கையில் மத்தியஸ்த துறை சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் தேவை நீதி அமைச்சின் விசேட பிரிவின் கீழ் நியமிக்கப் பட்டுள்ள வர்த்தக சட்ட மறுசீரமைப்பு பற்றிய உபகுழுவினால் இனங் காணப்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய அளவிலான உள்நாட்டு வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இயலுமாகும் வகையில் மத்தியஸ்த மட்டத்திலும் அதேபோன்று மத்தியஸ்த தீர்மானங்களை அமுல்படுத்தும் போதும் தற்போது நடைமுறையிலுள்ள தடைகளை நீக்கும் விதத்திலான ஏற்பாடுகள் உத்தேச சட்டத்தின் ஊடாக விதித்துரைக்கும் தேவை மேலும் இந்த உபகுழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க மத்தியஸ்த சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.