• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-02-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நக்கல்ஸ சேதன பசளை வலயத்துக்கென சேதன பசளை உற்பத்தி முனையமொன்றை நிர்மாணித்தல்
– மொறகஹகந்த, களுகங்கை மகாவலி 'F' வலயம் சேதன கமத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைபேறுடைய அபிவிருத்தி வலயமொன்றாக இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாம் வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சற்ற சேதன பதார்த்தங்களைப் பயன்படுத்தி கமத்தொழில் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயி களின் வருமானத்தை அதிகரிப்பதும் சேதன பயிர்ச் செய்கை தொடர்பில் உயர் தேர்ச்சிமிக்க விவசாயிகளின் பங்களிப்பின் மூலம் தேசிய சேதன கமத்தொழில் பயிர் உற்பத்தி இலக்கினை அடைவதும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்டகால பயிர்ச்செய்கைக்குத் தேவையான சேதனப் பசளை இந்த வலயத்திலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் இரண்டு சேதன பசளை முனையங்களைத் தேவையான ஆய்வுகூட வசதிகளுடன் வல்லேவெல மற்றும் குருவெல ஆகிய மகாவலி பிரிவுகளில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக வெல்லேவெல சேதன உர உற்பத்தி நிலையத்தை தாபிப் பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வருடாந்தம் சுமார் 2,000 மெற்றிக் தொன் பசளை உற்பத்தி செய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த சேதனப் பசளை முனையங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தினை நேரடி ஒப்பந்த மொன்றாக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.