• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தியாவின் M/s. Indian Oil Corporation Limited நிறுவனத்திடமிருந்து 40,000 மெ.தொ. கப்பல் தொகையொன்றை கொள்வனவு செய்தல்
- இந்தியாவின் M/s. Indian Oil Corporation Limited நிறுவனத்திடமிருந்து 40,000 மெ.தொ. டீசல் மற்றும் 40,000 மெ.தொ. பெற்றோல் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக வலுசக்தி அமைச்சு இந்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கிணங்க 40,000 மெ.தொ. டீசல் கப்பல் தொகையொன்றை வழங்குவதற்கு இந்தியாவின் M/s. Indian Oil Corporation Limited நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இந்த டீசல் தொகையை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.