• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேலதிக அறவீட்டு வரிச் சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2020 - 2021 மதிப்பீட்டு வருடம் சார்பில் 2,000 மில்லியன் ரூபாவை விட வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டுபவர்கள், கம்பனிகள் என்பவற்றின் மீது ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படும் 25 % கொண்ட மேலதிக அறவீட்டு வரியொன்றை விதிப்பதற்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட மேலதிக அறவீட்டு வரிச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.