• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் மசகு எண்ணெய் பெற்றுக் கொள்ளல்
- சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான மசகு எண்ணெய் 2022 யூலை மாதம் வரை பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னரான காலப்பகுதிக்குத் தேவையான மசகு எண்ணைய் பெற்றுக் கொள்வதற்கு' உரிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான மசகு எண்ணைய் வழங்கும் பொருட்டு சைப்ரஸ் Terra Navis Group நிறுவனத்தினால் அழைக்கப்படாத பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 180 நாட்கள் கடன் அடிப்டையில் மசகு எண்ணைய் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் மதிப்பிடப்பட்டு ஆரம்பத்தில் 450,000 பெரல் கொண்ட கப்பல் சரக்குத் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசின் பிரகாரம் உரிய உரிய மசகு எண்ணையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.