• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமனலவெவ மின்நிலையத்தில் இரண்டு மின்சார பிறப்பாக்கி உந்துமின்கலங்களை புதிதாக பொருத்துதல்
- சமனலவெவ மின்நிலையம் 120 மெகாவொட் நிலையான ஆற்றலுடனும் வருடாந்தம் சுமார் 276 கிகாவொட் மின்சார உற்பத்தியுடனும் 1992 ஆம் ஆண்டிலிருந்து வர்த்தக ரீதியில் செயற்படுகின்றது. உயர் மின்சார கேள்வி நிலவும் வேளைகளில் மின்சார கேள்வியினை பூர்த்தி செய்வதற்கும் தென் மாகாண முறைமையின் வோல்டேஜினை பேணுவதற்கும் இந்த மின் நிலையமானது கணிசமான பங்களிப்பினை நல்குகின்றது. இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் இந்த மின் நிலையத்தில் இயங்குவதோடு, அவற்றின் பாவனைக்காலம் 25 - 35 வருடங்களுக்கு இடைப்பட்டதாகும். ஆதலால் சமனலவெவ மின்நிலையத்தில் இரண்டு மின்சார பிறப்பாக்கி இயந்திரங்களின் பாவனைக்காலம் முடிவடைந்து வருகின்றதோடு, அவற்றை துரிதமாக திருத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, ஆரம்ப உபகரண உற்பத்தியாளரான ஐக்கிய இராச்சியத்தின் GEC Large Machines Ltd, நிறுவனத்திடமிருந்து இரண்டு மின்சார பிறப்பாக்கி உந்துமின்கலங்களை கொள்வனவு செய்வதற்கு உரிய பெறுகை வழிகாட்டல்களை பின்பற்றுவதற்கு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.