• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை ஐதரசன் உற்பத்தி தொடர்பிலான முன்னோடி கருத்திட்டம்
- அரசாங்கம் 2050 ஆம் ஆண்டளவில் காபன் பூச்சிய நிலையினை அடைவதற்கு கொள்கைத் தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கு வலுசக்தி விநியோக வலையமைப்பை மாற்றி இயற்கை எரிபொருளிலிருந்து தூய வலுசக்தி உற்பத்தி மற்றும் நுகர்வு என்பன பொருட்டு படிப்படியாக மாறும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அதேபோன்று அனல்மின் பாவனையின் மூலம் செயற்படும் கைத்தொழில்களிருந்து வௌியேறும் வாயுவின் அளவினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் நோர்வே Greenstat AS நிறுவனத்தின் இணை நிறுவனமொன்றான Greenstat Hydrogen India (Pvt.) Ltd., நிறுவனத்தினால் மிதக்கும் சூரிய மற்றும் காற்று கலவையினை பயன்படுத்தி பசுமை ஐதரசன் உற்பத்தி செய்யும் முன்னோடி கருத்திட்டமொன்று சம்பந்தமாக சாத்தியத்தகவாய்வொன்றை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்வதற்கு இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி சபைக்கும் Greenstat Hydrogen India (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.