• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- பிரம்பு, களிமண், பித்தளை, லாக்‌ஷா, முகமூடி, சிரட்டை, தங்க ஆபரணங்கள், கற்சிற்ப்பங்கள், புல் மற்றும் தும்பர வடிவமைப்பு போன்ற பாரம்பரிய குடிசை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் 1,000 மில்லியன் ரூபாவும் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் மூலம் 150 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்ற பின்வரும் கருத்திட்டங்களை குறித்த நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டிலும் செயற்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கிராமிய கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை செய்கை பண்ணும் நிகழ்ச்சித்திட்டம்.

* தேசிய மூலப்பொருள் வங்கியினை தாபிக்கும் கருத்திட்டம்.

* ஒரு கிராமத்திற்கு ஒரு தொழில்முயற்சியாளரை உருவாக்கும் கருத்திட்டம்.

* மரம் சார்ந்த உற்பத்திகள் வடிவமைப்பு மற்றும் செயற்பாடுகளின் புத்தாக்க நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்டம்.

* கிராமிய கைத்தொழிலுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தை மேம்பாட்டு கருத்திட்டம்.

* கிராமிய மற்றும் பாரம்பரிய கைத்தொழில் கிராமங்கள் ஒன்றிணைக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.

* தேசிய பட்டறைக் கைத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.