• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கை களைச் செய்து கொள்ளல்
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கமானது பின்வரும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது.

(i) இந்திய குடியரசு அரசாங்கத்துடன் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக செய்து கொள்ளப்பட்டுள்ள நெறிமுறை உடன்படிக்கை.

(ii) துருக்கி குடியரசு அரசாங்கத்துடன் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கை.

(iii) செக் குடியரசு அரசாங்கத்துடன் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கை.

இதற்கிணங்க, இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த உடன்படிக்கைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.