• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க போதைப் பொருட்களில் தங்கி வாழும் ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்தை திருத்துதல்
- போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்குமான ஏற்பாடுகள் 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க போதைப் பொருட்களில் தங்கி வாழும் ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினாலும் நீதி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.