• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசதுறை சார்பில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்பட்ட சிறிய அளவிலான Parenterals (SLSVP ஊசி மருந்து) கொள்வனவு செய்தல்
- தொற்று நீக்கப்பட்ட Liquid Small Volume Parenterals (SLSVP ஊசி மருந்து) கொள்வனவு செய்வதற்கு அண்ணளவாக அரசாங்கம் வருடாந்தம் 3,000 மில்லியன் ரூபா (சுமார் 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) செலவு செய்கின்றது. இந்த Parenterals கரைசல் சுமார் 50 மில்லியன் வருடாந்தம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட கைத்தொழிற்சாலையொன்றை பல்லேக பிரதேசத்தில் தாபிப்பதற்காக M/s Kelun Lifesciences (Pvt.) Ltd. கம்பனிக்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உரிய தரத்துடன் கூடிய தொற்று நீக்கப்பட்ட Liquid Small Volume Parenterals இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரே கம்பனியான இந்தக் கம்பனி 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து அதன் உற்பத்திகளை விநியோகிப்பதற்கு தயாராகியுள்ளது. இதற்கிணங்க, குறித்த உற்பத்திகளை அரசதுறையின் தேவைகளுக்காக பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த கம்பனிக்கும் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.