• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் பேட்டைகளைத் தாபிப்பதற்கும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு வர்த்தக அபிவிருத்தியின் பொருட்டு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்குமான தேசிய கருத்திட்டம்
- 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள கைத்தொழில் பேட்டைகளைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை பிரதேச மயமாக்கி பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளைத் தாபித்து பிரதேச கைத்தொழில் மயமாக்கல் செயற்பாட்டினைத் துரிதப்படுத்துவற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கைத்தொழில் அமைச்சினால் நிகழ்ச்சித்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன்கீழ் மாவட்ட / பிரதேச செயலக பிரிவுகள் மட்டத்தில் இனங்காணப்படும் காணிகளின் அளவுகளுக்கு அமைவாக இரண்டு வகை கைத்தொழில் பேட்டைகளைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 5-15 ஏக்கர் காணியில் 15-35 இற்கு இடைப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட சிறிய அளவிலான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் 15-25 ஏக்கர் காணியில் 35-50 இற்கு இடைப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட நடுத்தர அளவிலான கைத்தொழில் பேட்டைகளை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான தேசிய குழுவொன்றும் மாவட்ட வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.