• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் உறுப்புக்கள், திசுக்கள், உயிரணுக்கள் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பிலான தேசிய கொள்கை
- சிறுநீரகம், ஈரல், இருதயம் போன்ற உள் உறுப்புக்கள் செயலிழந்த நிலையிலுள்ள நோயாளிகளின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு சிறந்த சிகிச்சை முறையாக உறுப்புக்கள், திசுக்கள், உயிரணுக்கள் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சை முறையானது கருதப்படுகின்றது. இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள இரண்டு தேசிய நிலையங்கள் அடங்கலாக ஒன்பது அரசாங்க வைத்திய சாலைகளில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உறுப்புகளை நன்கொடையாக வழங்குபவர்களினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் அதேபோன்று உறுப்புகளை பெறும் நோயாளிகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன பொருட்டு உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பிலான தேசிய கொள்கையொன்று இருக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உலக சுகாதார மாநாட்டின் 57 ஆவது நியதிச்சட்டம் மற்றும் மனித உறுப்பு மாற்று சிகிச்சை பற்றிய உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களிலுள்ள மூல தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் உறுப்புக்கள், திசுக்கள், உயிரணுக்கள் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பிலான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.