• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொட்டா வீதி, இராஜகிரியவில் அமைந்துள்ள காணியில் வானுயர் கட்டடங்கள் அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- வடிவமைத்து, நிர்மாணித்து, நிதியளித்து, செயற்படுத்தி, கையளித்தல் என்னும் வழிமுறையின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இராஜகிரிய கொட்டா வீதியில் அமைந்துள்ள ஏக்கர் 01 றூட் 01 பேர்ச்சர்ஸ் 9.29 விஸ்தீரணமுடைய காணித் துண்டுசார்பில் போட்டி அடிப்படையில் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் நிலையில் அமைச்சரவை மீளாய்வுக் குழு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபை என்பவற்றினால் வானுயர் கட்டட அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த காணியை ஒரெக்ஸ் லீசீங் தனியார் கம்பனியின் துணைக் கம்பனியொன்றான LOLC Investment Holding Two (Pvt) Ltd. கம்பனிக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசின் மீது உரிய காணியை இந்த நோக்கம் கருதி பயன்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.