• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'ஒபட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' என்னும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் உதவித் தொகையை அதிகரித்தல்
- தற்காலிக வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தும் இந்தக் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளி குடும்பம் ஒன்றுக்கு ஆகக்கூடுதலாக 600,000/- ரூபாவைக் கொண்ட உதவித் தொகையானது வீடுகளை நிர்மாணிக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இந்தக் கருத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நிர்மாணிப்பு பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக 600,000/- ரூபாவைக் கொண்ட உதவித் தொகையிலிருந்து எதிர்பார்க்கப்பட்டவாறு குடியிருப்பதற்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்ட வீடொன்றை நிர்மாணிப்பது கடினமாகியுள்ளது. ஆதலால், 2022 ஆம் ஆண்டிலிருந்து தெரிவுசெய்யப்படும் பயனாளி குடும்பங்களுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் உதவித் தொகையினை 650,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.