• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரஸ்ஸ புதிய பேருந்து தரிப்பு நிலையத்தை தாபித்தல்
- 2012 ஆம் ஆண்டில் அக்குரஸ்ஸ நகர அபிவிருத்தி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்தக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக 4.5 ஏக்கர் அபிவிருத்தி செய்யப்பட்டு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் வர்த்தக அபிவிருத்திக்கும் தேவையான ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 1.75 ஏக்கரில் 20 முனைவிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுடன்கூடிய பிரதான பேருந்து நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. கருத்திட்டத்தின் இறுதி கட்டட மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கு அமைவாக 474 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் 2022 மற்றும் 2023 காலப்பகுதிக்குள் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.