• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் செய்துவரும் ரைகம பசுமை கைத்தொழில் பேட்டையிலிருந்து Maxons Bathware (Pvt) Ltd. கம்பனிக்கு காணித் துண்டொன்றை வழங்குதல்
- முழுநாட்டையும் தழுவும் விதத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கைத்தொழில்களை தாபித்தல் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திக்கென முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2021 யூன் மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள டயில் உற்பத்தி துறையில் முதன்மை கம்பனியொன்றான Maxons Bathware (Pvt) Ltd. கம்பனியினால் அண்ணளவாக 6,000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் டயில், குளியலறை உபகரணங்கள் மற்றும் துப்பரவேற்பாட்டு உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்காக காணித் துண்டொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கருத்திட்ட பிரேரிப்பொன்றை சமர்ப்பித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் கைத்தொழில் மற்றும் தொழிநுட்ப உயர் வலயமொன்றினை (ரைகம பசுமை கைத்தொழில் பேட்டை) நிர்மாணிப்பதற்கு தற்போது அபிருத்தி செய்யப்பட்டுவரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான நியூசெட்டல்வத்த என்னும் காணித் துண்டுக்கு அருகாமையில் அபிவிருத்தி செய்யப்படாத காணி பகுதியிலிருந்து 20 ஏக்கரை 35 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் உத்தேச கருத்திட்டத்திற்காக Maxons Bathware (Pvt) Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.