• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - 02, கொம்பனி வீதி, 'மெட்ரோ ஹோம்ஸ்' வதிவிடங்கள் வீடமைப்பு கருத்திட்டத்தில் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொம்பனி வீதி மீள் அபிவிருத்தி கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட காணித் துண்டில் ஆரம்ப குடியிருப்பாளர்களுக்காக வீடு மற்றும் வர்த்தக அலகுகளை நிர்மாணித்தலானது தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் மூன்று கோபுரங்களைக் கொண்ட 626 வீட்டு அலகுகள் மற்றும் 115 வர்த்தக அலகுகள் என்பவற்றைக் கொண்ட கட்டடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இது 'மெட்ரோ ஹோம்ஸ் ரெஸிடன்சி' என பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்ப குடியிருப்பாளர்களை புதிய வீட்டு அலகுகளில் குடியமர்த்தியதன் பின்னர், மீதி 78 வீட்டு அலகுகளை அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின்மீது தற்போதைய சந்தை பெறுமதிக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய பெறுமதியினை செலுத்தியுள்ள பெறுநர்களுக்கு இறையிலி உறுதி வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.