• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களனிய முதுன்எலவில் அமைந்துள்ள காணித் துண்டை மின்சார உபநிலைய மொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு உடைமை யாக்குதல்
- களனிய மற்றும் பேலியகொட பிரதேசங்களின் மின்சார அனுப்பீட்டு முறைமையை பலப்படுத்துவதற்காக புதிய உப நிலையமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு களனிய பிரதேசத்திலிருந்து காணித் துண்டொன்றை பெற்றுதருமாறு இலங்கை மின்சார சபையும் இலங்கை மின்சார தனியார் கம்பனியும் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிணங்க, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத் தினால் முதுன்எல அபிருத்தி கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணியிலிருந்து ஏக்கர் 0 றூட் 02 பேர்ச்சர்ஸ் 21.65 விஸ்தீரணமுடைய காணித் துண்டை அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின்மீது இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.