• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெற்செய்கைக்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினைக் கொள்வனவு செய்தல்
- கமத்தொழில் பணிப்பாளர் அதிபதியினால் நெற்செய்கைக்காக தயாரிக்கப்படும் சுற்றாடல்நேய பசளைக்கான சிபாரிகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2022 சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையினை விநியோகிக்கும் பொருட்டு பசளை கொள்வனவு செயற்பாட்டினை ஆரம்பிப்பதற்கும் 2022 ஆம் ஆண்டு சார்பில் பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியாளர்களினால் உரிய தரங்களுக்கு அமைவாக 2022 சிறுபோகத்தில் விநியோகிக்கப்படும் சுற்றாடல் நேய உள்நாட்டு பசளையை அரசாங்கத்தின் இரண்டு (02) பசளை கம்பனிகளின் ஊடாக கொள்வனவு செய்வதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.