• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு பயணமுடிவிட முகாமைத்துவ கம்பனிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இணையவழி சுற்றுலா முகவர்கள் ஆகியோர்களினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மேம்பாட்டு நோக்கங்களுக்கான கைத்தொழில் ஆதரவுத் திட்டம்
- பின் COVID தொற்றுநிலமையின் கீழ் உள்நாட்டு பயணமுடிவிட முகாமைத்துவ கம்பனிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இணையவழி சுற்றுலா முகவர்கள் ஆகியோர்களினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மேம்பாட்டு நோக்கங்களுக்காக கைத்தொழில் ஆதரவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் தகைமை பெறும் நிறுவனங்கள் சார்பில் 2022 ஆம் ஆண்டில் 06 மாத உச்ச காலப்பகுதியின் சார்பில் இந்த சலுகையினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் நிதியின் கீழ் 400 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை ஒதுக்குவதற்கு அதன் பணிப்பாளர் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச ஆதரவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.