• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் துணை நிறுவனமாக வெலிஓயா சீனி உற்பத்தி கைத்தொழிற்சாலையைத் தாபித்தல்
- இலங்கையின் வருடாந்தம் சீனி தேவை சுமார் 600,000 மெற்றிக்தொன்களாகும். அதில் சுமார் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதோடு, இதன் பொருட்டு வருடாந்தம் அன்னளவாக 45 பில்லியன் ரூபா செலவு செய்யப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் உள்ளூர் சீனி உற்பத்தி 54,000 மெற்றிக்தொன்களாவதோடு, இதனை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இலங்கை சீனி கம்பனியின் கீழ் புதிய சீனி உற்பத்தி கைத்தொழிற்சாலையொன்றை மொனராகலை மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தை மையமாகக் கொண்டு தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.