• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்தி கருத்திட்டம்
- திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிக்குரியதாக தற்போது இந்திய அரசாங்கத்துடன் நடைமுறையிலுள்ள மூன்று (03) உடன்படிக்கைகளையும் இராஜதந்திர கலந்துரையாடல்களின் மூலம் மீளாய்வு செய்து, கூட்டு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. இதற்கிணங்க, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் வர்த்தக நோக்கங்களுக்காக 24 எண்ணெய் தாங்கிகளை ஒதுக்குவதற்கும் Lanka IOC கம்பனி ஏற்கனவே பயன்படுத்திவரும் கீழ் எண்ணெய் தாங்கி தொகுதியிலுள்ள 14 எண்ணெய் தாங்கிகளை இந்த கம்பனியின் வர்த்தக நோக்கங்களுக்காக ஒதுக்குவதற்கும் மீதி 61 எண்ணெய் தாங்கிகளில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 சதவீதமும் Lanka IOC கம்பனிக்கு 49 சதவீதமான பங்கு உரி​மையுள்ளவாறு Trinco Petroleum Terminal (Pvt.) Limited என்னும் பெயரில் தாபிக்கப்பட்டுள்ள கம்பனியின் ஊடாக அபிவிருத்தி கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்குமாக வலுசக்தி அமைச்சரினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.