• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்குரியதாக 03/2016 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையைத் திருத்துதல்
- ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்கும் பொருட்டு 2018 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதைய விசேட சம்பள ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புக்களை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் உரிய சம்பள பிரேரிப்பினை தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஆலோசகர் சேவையானது தாபிக்கப்பட்டிருக்காமையினால், குறித்த இந்த சேவை சார்பிலும் சம்பள அளவுத்திட்டங்களை உள்ளடக்கி ஆசிரியர் ‑ அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு இயலுமாகும் வகையில் 03/2016 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையைத் திருத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.