• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்
- 2021 மற்றும் 2022 வரவுசெலவுத்திட்டங்களின் மூலம் மதுபானம், சிகரட், தொலைத்தொடர்புகள், பந்தயம் மற்றும் சூதாட்டம் மற்றும் வாகனங்கள் என்பவற்றின் மீது பெறுமதி சேர்த்தலின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பல்வேறு நியதிச்சட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி மற்றும் அறவீடுகள் சிலவற்றிற்கு பதிலாக இணையவழி முறையில் முகாமிக்கப்படும் தனியான விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியொன்றினை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோன்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி சேவைகளின் மீது பெறுமதி சேர்க்கப்பட்ட வரியினை அதிகரிப்பதற்கும் மற்றும் தொற்று அல்லது பொது சுகாதார நிலைமைகளின் கீழ் அரசாங்க வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சுக்கும் நன்கொடையாக வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள், கருவிகள் மற்றும் இரசாயன பொருட்கள் போன்றவற்றை பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. சட்டவரைநரினால் இந்த நோக்கம் கருதி தயாரிக்கப்பட்ட விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்திற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலத்திற்கும் சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, குறித்த இந்த சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.