• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 1,800,000 இனை கொள்வனவு செய்வ தற்கான கேள்வி
- பற்றீரியாக்கள் மூலம் ஏற்படும் சுவாச வழி சார்ந்த நோய் நிலமை அடங்கலாக பல்வேறுபட்ட நோய் நிலமைகளுக்காக பயன்படுத்தப்படும் Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 1,800,000 இனை கொள்வனவு செய்வதற்கு போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு மூன்று (03) கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த இந்த கேள்விகளை மதிப்பிட்டதன் பின்னர், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு முதலில் மொத்த தடுப்பூசி தேவையின் 25 சதவீதத்தை வழங்குவதற்கான பெறுகையினை அனுசரணையான ஆகக்குறைந்த விலைகளை முன்வைத்துள்ள இந்தியாவின் Venus Remedies Limited கம்பனிக்கு வழங்குவதற்கும் தடுப்பூசி செயற்பாடு தொடர்பிலான இறுதி பரிசோதகரர்கள் சிபாரின் மீது எஞ்சிய 75 சதவீதத்தை வழங்குவது சம்பந்தமாக தீர்மானிப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.