• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin BP 5 ‑ 6 கிராம் புட்டிகள் 75,000 இனை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- உயிர் ஆபத்து நிலைமையிலுள்ள நோய்களினால் துன்புறும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் Human Immunoglobulin BP 5 ‑ 6 கிராம் புட்டிகள் 75,000 இனை கொள்வனவு செய்வதற்கு போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த கேள்வியை இந்தியாவின் M/s Reliance Life Science (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.