• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டுறவு சதுக்கம் எனும் நிர்மாணிப்பு கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
- கூட்டுறவு சதுக்கம் எனும் பெயரில் கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு 2021 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தின் கீழ் சகல துறைகளுக்கும் உரியதான மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மதியுரை கம்பனியொன்றை தெரிவு செய்வதற்கு தேசிய போட்டி கேள்வி நடவடிக்கை முறையின் கீழ் ஆர்வ வௌிப்படுத்தல்கள் கோரப்பட்டு ஏழு (07) நிறுவனங்கள் குறுகிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் 06 நிறுவனங்களினால் உரிய பெறுகைக்கான பிரேரிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை M/s. Mihindu Kerrthiratne Associates கம்பனிக்கு வழங்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.