• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் சட்டகோவைக்கான திருத்தம் - பராயமடையாதவர்களுக்கு மரண தண்டனை விதித்தல்
- நீதிமன்றத்தின் தத்துவத்திற்கு அமைவாக குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்கு குறைந்த எவரேனும் ஒருவருக்கெதிராக மரண தண்டனையினை விதிப்பதற்கு அல்லது குறிப்பிடுவதற்கு ஆகாதெனவும் இந்த தண்டனைக்குப் பதிலாக குறித்த நபர் சனாதிபதி அவர்களின் விருப்பமிருக்கும் வரை தடுப்பு காவலில் வைப்பதன் மூலம் தண்டனை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தண்டனைச் சட்டகோவையின் 53 ஆம் பிரிவை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆயினும், தவறு புரியப்படும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்கு குறைவாகவிருக்குமிடத்து மரண தண்டனையினை விதிப்பதன் மூலம் தண்டனை வழங்கப்படலாகாதென்னும் ஏற்பாடுகள் தண்டனைச் சட்டகோவையின் 281 ஆம் பிரிவில் உள்வாங்கப்படவில்லை. ஆதலால், நிலவும் ஐயப்பாட்டினை நீக்கும் பொருட்டு குற்றவியல் சட்டகோவைக்கு உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குற்றவியல் சட்டகோவையின் 281 ஆம் பிரிவை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.