• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
- பிராந்திய கைத்தொழில் பேட்டை நிகழ்ச்சித்திட்டமானது பிரதேச மட்டத்தில் கைத்தொழில்களின் மேம்பாட்டினை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள 'பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழு' மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள 'அமைச்சு கருத்திட்ட மதிப்பீட்டு குழு' என்பன கருத்திட்ட பிரேரிப்புகளை முழுமையாக மதிப்பிட்டு அதன் பின்னர் இந்த நிகழ்ச்சித்திட்டம் சார்பில் பொருத்தமான முதலீட்டாளர்கள் இனங்காணப்படுவர். இதற்கிணங்க மேற்போந்த குழுக்களினால் 27 கருத்திட்ட பிரேரிப்புகள் ஆராயப்பட்டு குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 15 கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் 4,523.34 மில்லியன் ரூபாவை முதலீடு செய்வதற்கும் 2,477 நேரடி தொழில் வாய்ப்புகள் பிறப்பிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உரிய முதலீட்டாளர்களுக்கு 35 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.