• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லுணுகம்வெஹெர தேசிய பூங்காவை யால வலய இலக்கம் VI ஆக பிரகடனப்படுத்துதல்
- 23,499 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய யால கிழக்கு வலயத்தையும் உடவலவை தேசிய பூங்காவின் மேற்கு பகுதியையும் இடம்மாறும் யானைகளின் தங்குமிடமாக 1995 ஆம் ஆண்டில் லுணுகம்வெஹெர தேசிய பூங்கா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்கா யால தேசிய பூங்காவை ஒத்த காலநிலை அம்சங்களை கொண்டுள்ளதோடு, தேசிய பூங்காக்கள் இரண்டிலும் வசிக்கும் விலங்கினங்களும் ஒத்த வகையினங்களாகும். ஆதலால், ஒரே தன்மையிலான காலநிலை உயிரின பல்வகைமை மற்றும் சுற்றாடலைக் கொண்ட இரண்டு (02) தேசிய பூங்காக்களாக பேணுவதற்கு பதிலாக லுணுகம்வெஹெர தேசிய பூங்காவை யால வலய இலக்கம் VI ஆக பிரகடனப்படுத்தும் பொருட்டு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.