• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் Hokkaido Bunkyo பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இரு தரப்புக்கும் இடையில் உயர் கல்வி ஒத்துழைப்பின் பொருட்டு ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் Hokkaido Bunkyo பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. ஐந்து (05) வருட காலம் வலுவிலிருக்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் பீடங்கள், ஆய்வாளர்கள் உட்பட ஏனைய ஆராய்ச்சிகள், நிர்வாக பதவியணியினரின் பரிமாற்றல், மாணவர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், இரு தரப்புக்கும் இடையில் கூட்டு ஆராய்ச்சி செயற்பாடுகளை மேம்படுத்துதல், கல்வி தகவல்கள் மற்றும் பொருட்களின் பரிமாற்றல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.