• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதேச சபை எல்லைகளில் அமைந்துள்ள நகர பிரதேசங்களை இனங்காணுதலும் பிரகடனப்படுத்துதலும்
- நகர பிரதேசங்களாக வகுப்பீடு செய்யும் போது அதன் பொருட்டு பயன்படுத்தப்படும் பிரதான குறிகாட்டியாக 'நிர்வாக அலகுகள்' பயன்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக மாநகர சபை மற்றும் நகர சபை பிரதேசங்கள் மாத்திரம் தற்போது உத்தியோகபூர்வமாக நகர பிரதேசங்களாக வகுப்பீடு செய்யப்பட்டுள்ளன. குறித்த தகவுதிறனில் காணப்படும் குறைபாடு காரணமாக நகரமயமாக்கப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களும்கூட இதுவரை கிராமிய பிரதேசங்களாக இனங்காணப்படுகின்றமையினால் நகரமயமாக்கல் தொடர்பில் சரியான வரைவிலக்கனத்தின் தேவை எழுந்துள்ளது. 2000 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர, கிராம நிர்மாண கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின்படி நகர அபிவிருத்தி பிரதேசங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரம் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுடள்ளது. ஆதலால், ஆலோசனை குழுவொன்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டு, பிரதேச சபை எல்லைகளில் அமைந்துள்ள நகர பிரதேசங்களை இனங்காண்பதற்கும் குறித்த குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் நகர, கிராம நிர்மாண கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின்படி பிரகடனப்படுத்துவதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.