• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் நீதிச் செயற்பாட்டினுள் தடயவியல் போதைப் பொருட்கள் பகுப்பாய்வு தொடர்பான திறன் மேம்பாட்டு கருத்திட்டம்
- இலங்கையில் குற்றவியல் நீதிச் செயற்பாட்டினுள் தடயவியல் போதைப் பொருட்கள் பகுப்பாய்வு தொடர்பான திறன் மேம்பாட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் 04 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் போதைப் பொருள் மற்றும் நீதிமன்ற நஞ்சியல் இரசாயனக்கூடத்தின் பரிசோதனை உபகரணங்களை மேம்படுத்துதல், போதைப் பொருள் மற்றும் நீதிமன்ற நஞ்சியல் தொடர்பில் பயிற்சியினை வழங்குதல் மற்றும் இரசாயனக்கூட தகவல் முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கொடையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை, வௌிநாட்டு வளங்கள் திணைக்களம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு என்பவற்றுக்கிடையில் விசாரணை நியதிகள் (Terms of Reference) உள்ளடக்கப்பட்ட இணக்கப் பேச்சு அறிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.