• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தனித்துவமான அடையாள இலக்கத்துடன்கூடிய தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்குதல்
- இலங்கையில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் பிறப்பினை பதிவு செய்து அந்த குழந்தைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தின் படி பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய ரீதியில் தனிநபர் பெயர் பட்டியலை பேணுதல் மற்றும் 15 வயதினை அடைந்த அத்துடன் 15 வயதினை அடைகின்ற இலங்கையர்களின் கோரிக்கையின் பேரில் அவர்களை பதிவு செய்து தேசிய அடையாள அட்டையினை வழங்குதல் என்பன ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் (இலங்கை தனித்துவமான அடையாள இலக்கம்) ஒழுங்குவிதியின் கீழ் இலங்கை பிரசைகள் அனைவர் சார்பிலும் இலங்கை தனித்துவமான அடையாள இலக்கத்தை வழங்குவதற்கும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான அடையாள இலக்கத்தினை பயன்படுத்துவதன் மூலம் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் போதும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போதும் குறித்த பணிகளை இலகுவாகவும் வினைத்திறமையாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் முறைமையின் ஊடாக இணைய வழி மூலம் இலங்கை தனித்துவமான அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் குறித்த நபரின் பிறப்பு சான்றிதழை வழங்குவதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.