• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சந்தை விலைகளை நிலைப்படுத்துதல், நுகர்வோருக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் உள்நாட்டு கமத்தொழிலை பாதுகாத்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ள பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2021‑07‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 2236/66 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑08‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 2240/20 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑09‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2244/8 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑10‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 2249/3 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑10‑13 ஆம் திகதியிடப்பட்டதும் 2249/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑11‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2252/9 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2021‑11‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2252/25 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.