• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலஹா பத்திராவதி தேசிய பிக்குகள் பராமரிப்பு நிலையம் என்னும் பெயரில் நம்பிக்கை பொறுப்பொன்றைத் தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆதரவற்ற பிக்குமார்கள் சார்பில் பிக்குகள் பராமரிப்பு நிலையமொன்றாக நடாத்திச் செல்லப்படும் கலஹா பத்திராவதி தேசிய பிக்குகள் பராமரிப்பு நிலையத்தை சட்டபூர்வமான நிறுவனமொன்றாக நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் நம்பிக்கை பொறுப்பொன்றைத் தாபிப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு 2014 ஒக்றோபர் மாதம் 16 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.