• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல்களுக்காக செய்யப்படும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களைத் தயாரித்தல்
- இலங்கை பிரசைகளாக கொண்டுள்ள இறைமை வாக்குரிமையாகும். இது தேர்தலொன்றின் போது மக்களின் விருப்பாக சுதந்திரமானதும் நியாயமானதுமாக இருத்தல் வேண்டும் தேர்தலொன்றின் போது எவரேனும் அபேட்சகர் ஒருவர், கட்சியொன்று அல்லது குழுவொன்று மக்களின் வாக்கிற்காக எவ்வித கட்டுப்பாடுமின்றி அதிகளவு நிதியினை செலவு செய்யுமிடத்து அது மக்களின் விருப்பத்தின்பால் கணிசமான அளவு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தேர்தல்களின் போது போட்டியிடும் அபேட்சகர்கள் அல்லது குழுவினால் செய்யப்படும் செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையானது இலங்கையில் கலந்துரையாடலுக்கு உட்பட்டுள்ளதோடு, இந்தியா அடங்கலாக பெரும்பாலான நாடுகள் தேர்தல்களுக்கான செலவுகளை கட்டுப்ப.டுத்தும் சட்டங்ளை ஆக்கியுள்ளன. தேர்தல்களின் போது இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை குறைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்கு உரியதாக 2017 ஒக்றோபர் மாதம் 17 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரமும் பாராளுமன்ற தேர்தல் கட்டமைப்பிலும் சட்டங்களிலும் செய்யப் படவேண்டிய சீர்திருத்தங்களை இனங்காண்பதற்கும் இது தொடர்பில் தேவையான திருத்தங்களை சமர்ப்பிப்பதற் குமான பாராளுமன்ற விசேட குழுவினால் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வந்துள்ள விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உத்தேச திருத்தங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.