• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை / மொறட்டுவை கழிவுநீர் வௌியேற்றல் கருத்திட்டத்தின் கட்டம் 1 - படி நிலை 2 சார்பில் மலக்கழிவகற்றல் கட்டமைப்பை விரிவுபடுத்துதல்
- இலங்கை அரசாங்கத்தினதும் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மையினதும் நிதியிடலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இரத்மலானை / மொறட்டுவை கழிவுநீர் வௌியேற்றல் கருத்திட்டத்தின் கட்டம் 1 - படி நிலை 2 இன் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள மலக்கழிவகற்றல் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் உரிய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சர்வதேச போட்டி வழிமுறையின் கீ்ழ் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 07 விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப் பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை சீனாவின் M/s China Geo-Engineering Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.