• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் முறைமை தொழிநுட்ப பீடங்களுக்குத் தேவையான கட்டடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் - கட்டம் 2 இனை வழங்குதல்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் முறைமை தொழிநுட்ப பீடங்களுக்கான கட்டடங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டமானது உலக வங்கியின் நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "உயர்கல்வியினை விரிவுபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளைத் துரிதப்படுத்துதல்" என்னும் கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தின் கட்டம் 2 இன் கீழ் உரிய கட்டடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்கு தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி நடவடிக்கை முறையானது பின்பற்றப்பட்டு கேள்வி கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 10 விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் குறித்த விலைமுன்வைப்புகள் தொடர்பில் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை M/s Focus Marketing & Engineering Company (Pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.