• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தொழிநுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில்சார் கல்லூரிகள் என்பவற்றில் நிர்மாணிப்பு பாடநெறிகளுக்கான திறன் விருத்திக் கருத்திட்டம்
- நிர்மாணிப்புத் துறையின் தொழிற்சந்தையின் கேள்வியினை ஈடு செய்யும் உயர் தரத்திலான தொழிநுட்ப மற்றும் தொழில் சார் கல்வி மற்றும் பயிற்சியினை வழங்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட தொழிநுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில்சார் கல்லூரிகள் என்பவற்றில் நிர்மாணிப்புத் துறைசார்ந்த பாடநெறிகளை விருத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கொரிய குடியரசின் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் 04 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையொன்றினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடையின் கீழ் மருதானை மற்றும் இரத்தினபுரி ஆகிய தொழில்சார் கல்லூரிகளினதும் இரத்மலானை மற்றும் மாத்தறை ஆகிய தொழிநுட்ப கல்லூரிகளினதும் திறன் விருத்தியினை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பானது அண்ணளவாக 441,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு உரிய கொடையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கொரிய குடியரசின் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் (KOICA) உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.